போரினால் கிழக்கு மாகாணத்தில் 49,000 பெண்கள் தமது கணவரை இழந்துள்ளனர்!
போரினால் கிழக்கு மாகாணத்தில் 49,000 பெண்கள் தமது கணவரை இழந்துள்ளனர்!
இவ் விடயம் 02. 05. 2010, (சனி), தமிழீழ நேரம் 4:32க்கு பதிவு செய்யப்பட்டது
செய்திகள்இலங்கையில் நடைபெற்ற போரினால் கிழக்கு மாகாணத்தில் 49,000 பெண்கள் தமது கணவரை இழந்துள்ளதாக சிறிலங்காவின் சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சர் Tissa Karalliyadda சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து சிறுவர் மற்றும் மகளீர் நலத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், இவர்களில் 12,000 பெண்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த 25,000 பெண்களில் 12,000 பெண்களுக்கு குறைந்தது தலா மூன்று பிள்ளைகளோ அல்லது அதற்கு மேலதிகமாகவே இருப்பதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பாதிக்கப்பட்டு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு உளநல மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு தமது அமைச்சு முக்கியத்துவம் கொடுத்து செயற்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் நோக்கில் இந்திய சுய தொழில் பெண்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை கடந்த மாதம் சந்தித்திருந்தனர்.
இச்சந்திப்பில் போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தவர்களின் பிரச்சினை, பெண்களின் சுய தொழில் வாய்ப்பு, பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப நிலவரம் என்பன குறித்து ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
http://www.google.co.in/transliterate/indic/Tamil
நன்றி
2010 நெருடல்.com
Subscribe to:
Post Comments (Atom)
ALL NGOs WHO WORK FOR W&O,PLEASE SEND YOUR INFO! WE CAN PUBLISH HERE FREE
ReplyDelete